முக்கியச் செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு

இளநிலை உதவியாளர், VAO உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 குரூப் இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22 லட்சத்து 02 ஆயிரத்து 942 பேர் எழுதுகின்றனர். இதில், 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 3-ம் பாலினத்தவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 689 மையங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள், வீடியோகிராஃபர்கள், சிசிடிவி ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினரும் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வறையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க தீவிர பரிசோதனைக்குப் பிறகே, தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் 503 மையங்களில் நடைபெறும் தேர்வை 1,56,218 பேர் எழுதுகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!

Jayapriya

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரீசார்ஜ் கிடையாது

Web Editor

2,500 ஆண்டுகள் பழமையான இலக்கணச் சிக்கலுக்கு தீர்வு – இந்திய ஆய்வு மாணவர் அசத்தல்

EZHILARASAN D