டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரபல பாப் பாடகி ரிஹானா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதராவாக தனது கருத்தை டிவிட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி காவல்துறை கிரெட்டாவுக்கு எதிராக “குற்றவியல் சதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்” சட்டப் பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், “விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு நான் உறுதுணையாக நிற்கிறேன். மனித உரிமை மீறல்கள் மற்றும், அச்சுறுத்தல்கள் மூலமாக என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிட முடியாது ” என கிரெட்டா டெல்லி காவல்துறைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.







