முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத திட்டங்கள் மட்டுமே நடைமுறைபடுத்தப்படும், என கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று விஜய் வசந்த் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சி தலைவருமான அரவிந்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்த வேட்பாளர் விஜய் வசந்த், அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய் வசந்த கூறும்போது ” கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை பாதிக்காத திட்டங்களை மட்டுமே கொண்டு வருவோம். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி வரவேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Gayathri Venkatesan

வேலை தருவதாக அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இளம் பெண் அதிர்ச்சி புகார்

EZHILARASAN D

ஒலிம்பிக் படகு போட்டியில் தகுதி பெற்ற முதல் தமிழக வீராங்கனை!