கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமாரியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் மறைவுக்கு பிறகு அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் உடன் கன்னியாகுமரி மக்களவை தொகுயின் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் சார்பாக போட்டியிட அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் போட்டியிட, நாடாளுமன்ற உறப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் மறைந்த எச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தகுமாரும் காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்பட ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.