காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்க ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை இந்த தொற்று ஏற்படுத் தி வருகிறது. ஒரே நாளில் புதிதாக, 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24,898 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 810 பேர் 12 வயதுக்கு உட்படவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மாநிலத்தில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முகக்கவசம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், PPE கிட் என்றழைக்கப் படும் பாதுகாப்பு கவச உடை, கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.







