மத்திய அரசு தங்கம் மற்றும் சில சமையல் எண்ணெயின் அடிப்படை இறக்குமதி விலையை குறைத்துள்ளது.
மத்திய அரசு 15 நாள்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலைகளை மாற்றும். அதனடிப்படையில் தான் ஒரு இறக்குமதியாளர் வரி செலுத்த வேண்டிய அளவு கணக்கிடப்படுகிறது. உலக அளவில் தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியை தவிர அனைத்துப் பொருள்களின் விலையும் ஒரு டன்னுக்கு டாலர் அடிப்படையில் உள்ளன. தங்கத்துக்கு மட்டும் 10 கிராமுக்கு டாலர் என்ற அடிப்படையில உள்ளது. தங்கத்தின் இறக்குமதி வரியை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளில் இறங்கியது.
10 கிராம் 557 டாலரில் இருந்து, 549 டாலர் என குறைக்கப்பட்டது. ஆனால், அது பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தங்கம் ஓர் சர்வதேசப் பொருள். அதன் விலை அமெரிக்க டாலரை மையப்படுத்திதான் இருக்கும். எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலை, இறக்குமதி வரியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தங்கம் இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசும் விலையை குறைத்துள்ளது.
இந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 1,500 ஆகக் குறைந்து ரூ. 49,231 (10 கிராம்) ஆக உள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் எண்ணெய் விலையை குறைத்திருப்பது அதன் தேவையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-ம.பவித்ரா








