முக்கியச் செய்திகள் Health

இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன, அதன் பொதுவான அறிகுறிகள் என்னென்ன .

இன்ஃபுளுயன்சா என்பது சுவாச மண்டலத்தில் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது இன்ஃபுளுயன்சா என்ற வைரஸ் கிருமியால் உருவாகிறது.இன்ஃபுளுயன்சா வைரஸின் பொதுவான அறிகுறிகள் :

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1. அதிக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தசை வலி, இருமல், உடல்சோர்வு போன்றவையாகும்.

2. பாதிப்பு ஏற்பட்ட 2 நாட்களுக்குப் பின்னர் இன்ஃபுளுயன்சா வைரஸ் அறிகுறிகள் தென்படும்.

3. குழந்தைகளுக்குக் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் மூலம்  இன்ஃபுளுயன்சா என்ற வைரஸ் தென்படலாம்.

4. இன்ஃபுளுயன்சா காய்ச்சல் பெரும்பாலோர்க்கு தானாகவே குணமாகிவிடும். சிலருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

5. மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம், உடற் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

6. ஏ, பி மற்றும் சி வகை என மூன்று வகையான இன்ஃபுளுயன்சா வைரஸ்கள் உள்ளன.
இந்த வைரஸ் கிருமிகள் காற்று அல்லது இருமல் வழியாகப் பரவுகின்றன.

7. தொண்டைச் சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் இந்த நோயின் பாதிப்பை உறுதிப்படுத்தலாம்.

8. அதிக ஆபத்தில் இருக்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சலுக்கு எதிரான வருடாந்திர தடுப்பூசிகள் போடுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயில்வே தேர்வில் முறைகேடு: 108 பேர் மீது வழக்குப் பதிவு – தேர்வாணையம் விளக்கம்

Web Editor

வீட்டு வாடகை கொடுக்கக் கூட வழி இல்லை – நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர்

Web Editor

கேப்டன் வருண்சிங் உடலுக்கு மத்தியப்பிரசேத முதலமைச்சர் அஞ்சலி

G SaravanaKumar