முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்னிபாத் விவகாரத்தில் ஆளுநர் கருத்து ஏற்புடையதல்ல-ப.சிதம்பரம்

அக்னிபாத் திட்டம் தொடர்பாக ஆளுநர் கருத்துத தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் வரை இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. தெலங்கானாவில் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ரயில்வே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சிறப்பான அக்னிபாத் திட்டத்தை தவறாக புரிந்துகொண்டு இளைஞர்கள் அரசின் சொத்துகளை சேதப்படுத்துகின்றனர் என தமிழக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

‘அக்னிபாத்’ திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுனர் பங்கேற்பதற்கு இடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரஜினி – மோகன்பாபு நட்பு தூய்மையானது, ஆழமானது: நடிகை லட்சுமி மன்சு !

Halley Karthik

3-வது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்

Gayathri Venkatesan

24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!

Ezhilarasan