முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனா அறிகுறி உள்ளவர்களின் விவரங்கள் தேவை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் கொரோனா பாதித்தவர்கள் இருந்தால் அவர்கள் தொடர்பான விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த  தொற்று பாதிப்பு 250 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே, தொற்று பாதித்தவர்களின் விவரங்களை தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில்  தொற்று அறிகுறியுள்ளவர்கள் என கருதப்படும் நபர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது, வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு
தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொதுமருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம்  தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவதில்லை.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில்  தொற்று அறிகுறி
உள்ள நபர்கள் அல்லது  தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள்
மற்றும் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

தவறும் பட்சத்தில் பொது சுகாதாரத் துறை சட்டம் மற்றும் மாநகராட்சியின் முனிசிபல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

 

– இரா. நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு

Gayathri Venkatesan

கொரோனா பணிகளில் பயிற்சி மருத்துவர்கள்!

ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு

Halley Karthik