முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள்தான் – 6 பேர் விடுதலை வழக்கு குறித்து சீமான் கருத்து

நளினி உட்பட 6 பேர் விடுதலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள் தான் என கூறினார்.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். அதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கொள்காட்டியும், வயது காரணத்தை சொல்லி சிறையில் இருந்த மற்ற 6 பேருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் விளக்கமளித்தது. நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு முன்பே நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் 7 பேர் விடுதலைக்காக போராடியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பு குறித்து மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம் என கூறினார்.

அனைவரும் இந்த நாளுக்காகதான் காத்திருந்தோம். மேலும் ஆளுநர் என்பவர் மாநிலங்களுக்கு தடைக்கல்லாகதான் பார்க்கிறோம். ஒன்றிய அரசால்தான் நியமிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் 7 பேர் விடுதலை விவாதம் நடத்தப்பட்டபோது, காங்கிரஸ் இதனை தடையாக்கியது. நீண்ட கால போராட்டத்திற்கான வெற்றியாக இதை பார்க்கிறேன். இதற்காக நாம் நியை இழந்துள்ளோம் எனவே, நளினி உட்பட 6 பேர் விடுதலையை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

EZHILARASAN D

மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Jayasheeba

ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….

G SaravanaKumar