ஆளுநர் ஆர்என் ரவி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆர்எஸ்எஸ் பணியில் ஈடுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழவெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு
கேட்டதற்காக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் , பெண்கள், குழந்தைகள் உட்பட 44
பேர் ஒரே குடிசையில் வைத்து ஒன்றாக எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த சோக சம்பவத்தின் 54ஆவது ஆண்டு நினைவு தினம் கீழவெண்மணியில் இன்று
அனுசரிக்கப்பட்டது. 44 பேர் இறந்துபோன குடிசை இருந்த இடத்தில்
புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நினைவு தூணில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் G. ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் அ.செளந்தரராஜன், நாகை மாலி, மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன். தமிழகத்தில் இன்றும் சாதி கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவாதகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு மோசமான தவறான பொருளாதார கொள்கையை கடைப்பிடித்து வருகிறது என்றும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் காலி பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது என்றார்.
மேலும் மத்திய அரசின் கொள்கையால் தமிழ்நாட்டில் பஞ்சாலைகள்
நூற்பாலைகள் நழிவடைந்துள்ளது விட்டதாக குற்றம் சாட்டினார். தமிழக ஆளுநர் ரவி
அடிப்படை கடமையை தவறி ஆர்.எஸ்.எஸ் காரராக செயல்படுகிறார்.
எனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணியில் அவர் ஈடுபட வேண்டும் என்றார். பொங்கல் தொகுப்பில் அரிசி சர்க்கரை உடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்சார கட்டணம் பால் விலை உயர்வை சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை குறைப்பதற்கு மறு பரிசிலனை என்ன செய்ய வேண்டும் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் மோசமான தவறுகளை மறைப்பதற்கு தமிழ்நாட்டில் திரை மறைவு போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தமிழக அரசுக்கு எதிராக போலி நாடகத்தை அண்ணாமலை நடத்தி வருகிறார் என விமர்சனம் செய்தார்.







