கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை கோவை அழைத்து வந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் உக்கடம் பகுதியில் வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கார் வெடிப்பு சம்வத்தில் கைது செய்யபட்ட ஐந்து பேரை கோவை அழைத்து வந்துள்ள
என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் உக்கடம் பகுதியில் வீடு உள்பட பல்வேறு
இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை கார் வெடித்த சம்பவத்தில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யபட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது
அசாருதீன், முகம்மது ரியாஸ்,பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும்
அப்சல்கான் ஆகிய 5 பேரை ஒன்பது நாட்கள் NIA அதிகாரிகள் காவலில் எடுத்து
விசாரிக்க என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதனடிப்படையில் சென்னையில் நான்கு நாட்களாக விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள், நேற்றிரவு விசாரணைக்காக ஐந்து பேரையும் கோவை அழைத்து வந்தனர். கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஐந்து பேரையும் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று அதிகாலை ஐந்து பேரையும் அவரவர் வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக ஐந்து பேருக்கும் தனிதனியாக குழுக்களாக பிரிந்து அவரவர் வீடுகள் மற்றும் ஐந்து பேரும் சென்ற இடங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணையானது மேற்கொள்ளபட்டு வருகிறது.உக்கடம்,ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த விசாரணையானது இன்று பிற்பகல் வரை நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் ஐந்து பேரிடமும் நடத்தும் விசாரணையை அதிகாரிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு தினங்கள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.