முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்திருப்பதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய சட்டப்படிப்பு பட்டதாரிகளுக்கான தன்னார்வ பயிற்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 மாணவர்களுக்கு ஆணையை  அமைச்சர் ரகுபதி இன்று வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், “ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில் திருப்பி அனுப்பவும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மீண்டும் வலியுறுத்துவதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள்ளாக நேரம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

10 சதவிகித பொருளாதார இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் போது தமிழக அரசும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார். ஜல்லிக்கட்டை பொறுத்தவரையில் தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குகள் வரும் போது அரசும் தேவையான வாதங்களை முன்வைக்கும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் பொன்விழா ஆண்டு; ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

G SaravanaKumar

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்: அதிபர் பைடன் கருத்து

Web Editor

சூரப்பா மீதான விசாரணை நிறைவு

G SaravanaKumar
RBI அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சியின் செயல்பாடுகள் வந்தான் சோழன்! வெளியானது பொன்னியின் செல்வன்!! சென்ற இடமெல்லாம் வென்ற மாமன்னன் ராஜராஜன் சென்னை டூ மைசூரு – வந்தே பாரத் ரயில் பிரான்சின் செவாலியர் விருது பெற்ற தமிழர்கள்