ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கண்டனம்

ஆளுநர் உடனான சந்திப்பில், அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

ஆளுநர் உடனான சந்திப்பில், அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்திப்பது ஏற்புடையதே எனத் தெரிவித்துள்ள அவர், அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/kbcpim/status/1556859077153525762

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்aகான கட்சி அலுவலகம் அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலைப் பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது எனக் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!’

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ள அவர், தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.