“ஆளுநர்கள் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது”- முரசொலி

பிரிட்டிஷ் பாணியில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், மாநில அரசின் 161வது…

பிரிட்டிஷ் பாணியில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில்,
மாநில அரசின் 161வது பிரிவின் உரிமையைக் காக்க நாங்கள் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்துகிறோம் என்பது தான் பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகளின் இறுதி முடிவு ஆகும்.

இதனையே ஆறுபேர் வழக்கிலும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினா ஆகிய இருவரும் வழிமொழிந்தார்கள். “அரசியல் சாசனம் பிரிவு 142 இன் படி முழுமையான நீதியை வழங்குவ தற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் உச்சநீதிமன்றம் வழங்கலாம். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் தண்டிக்கப்பட்ட மேல்முறையீட்டாளரின் விடுதலை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராக இருக்கிறார்.

சந்தேகத்துக்கு இடமின்றி இந்த வழக்கில் அனைவருக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. எனவே, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்ட கருத்துகள். இவர்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் நெத்தியில் அடித்ததைப் போல எழுதி இருக்கிறார்கள்.

பிரிட்டிஷாரைத் திட்டிக் கொண்டே பிரிட்டிஷ் பாணியில் ‘கவர்னர் ஜெனரலாக’ நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் இதில் நிறைய இருக்கிறது!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.