தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல்…

சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவரது உரையில், ’நாடு முழுவதும் 50 கோடி இந்தியர்கள் இலவசமான மருத்துவ வசதிகளை பெறுகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிரான சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் மூலமாக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் முன்னேற்றத்திற்காக அரசு உழைத்து வருகிறது. நமது நாட்டின் தன்னம்பிக்கை உச்சத்தில் உள்ளது. நமது நாடு தற்போது நம்பிக்கையின் பாதையில் பயணித்து வருகிறது. நமது டிஜிட்டல் நெட்வொர்க் திட்டங்கள் உலகுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. கொரோனாவை பெருந்தொற்றை இந்தியா கையாண்ட விதத்தை உலகமே பாராட்டியது. இந்த நிலையான பலமான அரசு கொரொனா பொருந்தொற்றை சிறப்பாக கையாண்டது.

நாட்டின் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு அரசின் முன்னுரிமை. இந்த சிறு விவசாயிகள், பல தசாப்தங்களாக, அரசாங்கத்தின் முன்னுரிமையை இழந்தனர். இப்போது அவர்களை வலுவாகவும், வளமாகவும் மாற்ற எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல நூற்றாண்டுகளாக ஏழைகள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒவ்வொரு சமுதாயத்தினரின் விருப்பங்களையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. இவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கனவு காணும் தைரியத்தை அளித்துள்ளனர்.

பழங்குடியினரின் பெருமைகளை பறைசாற்றவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வளர்ச்சிக்காவும் திட்டங்கள் வகுக்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய கிராமங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் வளர்ச்சியில் அக்கறை சொலுத்தப்பட்டது, துரிதப்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை நமது நாட்டிற்கான வரப்பிரசாதங்கள் ஆகும். நாட்டின் எல்லையோர கிராமங்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க, அரசு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளது. தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வளர்ச்சி வேகம் நடைபெற்று வருகிறது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கல்வி கற்க வைப்போம். பிரச்சாரத்தின் வெற்றியை இன்று காண்கிறோம். பெண்களின் ஆரோக்கியம் முன்பை விட மேம்பட்டுள்ளது. எந்தவொரு வேலையிலும், எந்த ஒரு துறையிலும் பெண்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்பதையும் அரசு உறுதி செய்துள்ளது’ என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.