‘சீரான முறையில் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சிக்கல்களைத் தீர்த்து சீரான பேருந்துகளை இயக்க அரசு முன்வருமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக…

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சிக்கல்களைத் தீர்த்து சீரான பேருந்துகளை இயக்க அரசு முன்வருமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 18 கிளை அலுவலகம் உள்ளது. இதில் ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால், டீசல் பற்றாக்குறையால் 30 சதவீதத்திற்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரை மண்டல போக்குவரத்து பிரிவுக்கு உள்ள பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப ஐஓசி நிறுவனத்தின் ஒப்பந்தம் செய்யப்பட்டு, போக்குவரத்துக் கிளைக் கழக அலுவலகங்களில் பெட்ரோல் பங்க அமைத்து டீசல் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், டீசல் விலை அதிகரிப்பால் லிட்டருக்கு 4 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால், போக்குவரத்து கிளைக் கழகங்கள் உள்ள பேருந்துகள் தனியார் பெட்ரோல் பங்க மூலம் டீசலை நிரம்பி வந்தன எனத் தெரிவித்துள்ள அவர்,

அண்மைச் செய்தி; ‘நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன தெரியுமா?’

தற்போது மகளிர் இலவச பேருந்து சலுகையால் பல பேருந்துகளில் வசூல் பாதிப்பு அடைந்து, தனியார் பெட்ரோல் பங்கிற்கான டீசல் தொகையினை செலுத்த முடியாத நிலையில் உள்ளது. போக்குவரத்துக் கழகம் சார்பில் டீசலுக்கான தொகையை நிலுவை வைத்துச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனால், பெரும்பாலான தனியார் பெட்ரோல் பங்குகள் டீசல் விநியோகிக்க மறுத்துவிட்டது. இதனால், பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்பொழுது உதிரிப் பாகங்கள் சரிவரக் கிடைப்பதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், குறிப்பாகப் பேருந்துக்கு பல்பு கூட தட்டுப்பாடு உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது, இதன் மூலம் சரிவரப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன, கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் பேருந்துகளைச் சீராக இயக்கப்பட்டது எங்கும் பேருந்துகள் தடையில்லாமல் இயங்கின எனத் தெரிவித்துள்ள அவர், மக்கள் பயன்பாட்டிற்காகச் சேவையாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக சிக்கல்களைச் சரி செய்து சீரான முறையில் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.