முக்கியச் செய்திகள்

நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை!

சென்னையில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளியில் படித்த மாணவன்
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதாப்.
அவரது மனைவி ஜெயந்தி இட்லி வியாபாரம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2
மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகனான தனுஷ் கடந்த 2020ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதி
தேர்ச்சியும் பெற்றுள்ளார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் 159
மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். அவர் எடுத்த
மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காமல் போயுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத
காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். நீட்
தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில்
பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் தனுஷ் பயிற்சி மேற்கொண்டுள்ளார். வீட்டின் ஏழ்மை காரணமாக தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இருப்பினும் சொந்த முயற்சியில் வீட்டில் இருந்து கொண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷ் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சகோதரரிடம் ஆங்கிலத்தில் அனைத்தும் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாகக் கூறி வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்ட் மூலமாக தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் படிக்க முடியாத காரணத்தினாலும், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவித்து வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனுஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷின் சகோதரர் கரண் தெரிவிக்கும்போது, தனது சகோதரர் தனுஷ்
முதல் முறை நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரி சேர்வதற்கான மதிப்பெண்
எடுக்காததால், மீண்டும் நீட் தேர்வு எழுத பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆங்கிலத்தில் இருப்பதால் அரசுப் பள்ளியில் படித்த தனக்கு படிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், மருத்துவ சீட் கிடைக்குமா என்று பயத்தை வெளிப்படுத்தியதாகவும், படிப்பில் சரியான பாதை தேர்ந்தெடுத்து செல்கிறேனா என்ற மனக் குழப்பத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்

மருத்துவர்போல் பல உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை தன்னுடன் சகோதரர் தனுஷ்
பகிர்ந்து கொண்டு வந்துள்ளதாகவும், தான் மருத்துவர் ஆனவுடன் அனைத்து ஊடகங்களும் நம் வீட்டின் வாசலில் வந்து தன்னை பேட்டி எடுப்பார்கள் என்றும் ஆசை ஆசையாகக் கூறிய தன் சகோதரன் இறப்பிற்கு அனைத்து ஊடகங்களும் வந்துள்ளதாக கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தீவிரப் பயிற்சி மேற்கொண்டு அரசுப் பள்ளியில் படித்த பழங்குடியின மாணவன், நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்; எழும் கோரிக்கை

EZHILARASAN D

யாருடையது உண்மையான சிவசேனா? – ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு

Web Editor

திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை 

EZHILARASAN D