முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்-உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசு தரப்பு வழக்கறிஞர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவது எவ்வளவு முக்கியமோ,
அதேபோல அவற்றில் தவறுகள் நிகழும்போது, அரசின் நோக்கம் பாதிக்கப்படாதவாறு காப்பதும் அவசியம் என்று மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில்,
உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்த திசைவீரபாண்டியன் உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “கடலாடி தாலுகா,
மங்களம் கிராம மலட்டாற்று பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக மலட்டாறே திகழும்
நிலையில், அளவுக்கு அதிகமாக இங்கு மணல் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி
நீர்மட்டம் குறைந்துள்ளதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனிம வள விதிகளின்படி குவாரியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆனால் இந்த குவாரியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. 15 அடி ஆழத்திற்கும் அதிகமாக
மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோதமானது. ஆகவே கடலாடி தாலுகா,
மங்கலம் கிராமம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதித்து உத்தரவிட
வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத்
அமர்வு,” குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய
வந்தால், கடுமையாகத் தண்டிக்கப்படுவர். அரசு தரப்பு வழக்கறிஞர் அரசுக்கு ஆதரவாக
செயல்படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல அவற்றில் தவறுகள் நிகழும்போது, அரசின் நோக்கம் பாதிக்கப்படாதவாறு காப்பதும் அவசியம் எனக் குறிப்பிட்டு,
அரசுத் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர்
26ஆம் தேதிக்கு வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Arivazhagan Chinnasamy

நித்யானந்தா போல் தோற்றமளித்த சாமியார்; ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்

G SaravanaKumar

என்னப்பா சொல்றீங்க…குஷ்பூ, மீனா ரஜினிக்கு அக்காவா? தங்கச்சியா?

Halley Karthik