52-வது கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஆவாசவயுஹம்’ சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.
கேரள அரசின் சார்பில் 52-வது ( 2021-ம் ஆண்டிற்கான) திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான சயீத் அக்தர் மிர்சா நடுவர் குழுவின் தலைவராக பணிபுரிந்துள்ளார். விருதுகளுக்காக மொத்தம் 142 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் அதில் 45 படங்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறந்த நடிகர் – பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ்
சிறந்த நடிகை – ரேவதி
சிறந்த இயக்குனர் – திலீஷ் போத்தன்
சிறந்த திரைப்படம் – ஆவாசவயுஹம்
சிறந்த அறிமுக இயக்குனர் – கிருஷ்ணேந்து ராகேஷ்
சிறந்த ஒளிப்பதிவாளர் – மது நீலகண்டன்
சிறந்த இசையமைப்பாளர் – ஹிஷாம்
மிகவும் பிரபலமான திரைப்படம் – ஹிருதயம்
சிறந்த குழந்தைகள் திரைப்படம்- காடகளம்
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) – நாயாட்டு, ஸ்ரீகுமரன் தம்பி
சிறந்த திரைக்கதை (தழுவல் கதை)- ஜோஜி, ஷியாம் புஷ்கரன்
சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – ஆதித்யன்
சிறந்த பாடகர் – பிரதீப்குமார்
சிறந்த பாடகி – சித்ரா கிருஷ்ணகுமார்
சிறந்த பின்னணி இசை – ஜோஜி, ஜஸ்டின் வர்கீஸ்
சிறந்த பாடலாசிரியர் – பி.கே.ஹரி நாராயணன்
சிறந்த எடிட்டர் – நாராயணன், நாயாட்டு
சிறந்த ஒளிப்பதிவாளர்- மது நீலகண்டன், சுருளி
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ஜஸ்டின் ஜோஷ், மின்னல் சுருளி
சிறந்த டப்பிங் (பெண்)- எஸ்.தேவி
சிறந்த மேக்கப் கலைஞர் – ரஞ்சித் அம்பாடி (ஆர்க்கரியம்)
சிறந்த உடை வடிவமைப்பாளர்- மின்னல் முரளி
சிறந்த கலை இயக்குநர் -ஏ.வி.கோகுல்தாஸ்
உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.