தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்யவுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி செல்கிறார். இதையொட்டி இன்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 8.40 மணிக்கு புறப்படும் பொதிகை அதிவிரைவு ரயிலில் முதலமைச்சர் பயணிக்கவுள்ளார்.
செங்கோட்டை வரை செல்லும் இந்த பொதிகை ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். தென்காசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளதை அடுத்து, எழும்பூர், தென்காசி ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.







