முக்கியச் செய்திகள் இந்தியா

நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களின் அனுமதி தேவையில்லை- மத்திய இணை அமைச்சர் அஸ்வினி

மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளின் படி, நியூட்ரினோ திட்டத்திற்காக மக்களிடம் அனுமதி கேட்க தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்திலிருந்து மத்திய அரசிற்கு வந்துள்ளதா என்றும், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி, சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் பொதுமக்களின் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டதா என்றும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள பல்லுயிர் காப்பகம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா போன்ற கேள்விகளை எழுப்பினார்.

தேனி நியூட்ரினோ திட்டம்

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழக அரசிடமிருந்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தன என தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன எனவே விதிகளின் படி, இந்தத் திட்டத்திற்கு மக்கள் கருத்தினை கேட்க தேவையில்லை என தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் அந்தப் பகுதியில் தூசு, இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்பு, ஒலி மாசுபாடு ஆகியவை ஏற்படும் என தெரிவித்த மத்திய அமைச்சர், இதைக் கட்டுப் படுத்துவதற்காக, வெடி பொருட்களை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். தூசியை கட்டுப்படுத்த நீர் தெளிப்பது மற்றும் கழிவுகளை அன்றன்றே அகற்றுவது, கழிவு நிலைகளை முறையாக சுத்திகரித்து அகற்றவது, தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அஸ்வினி சௌபே பதிலளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பாஜகவில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்!

Arun

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள ரூ.25கோடி ஒதுக்கீடு!

Halley karthi

மாநிலங்களவை எம்.பியானார் எம்.எம்.அப்துல்லா

Ezhilarasan