மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கூடங்குளம், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என, அப்போது அவர் தெரிவித்தார்.கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.சமத்துவப்புரங்கள் சீரமைக்கப்படும் என்றும், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
திருக்கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க திண்டிவனம், செய்யாறு பகுதிகளில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.







