முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

என்னா அடி.. சக வீரர்களிடம் சொன்னதை செய்த இஷான் கிஷன்

முதல் பந்திலேயே சிக்சர் விளாசுவேன் என்று சகவீரர்களின் கூறியபடியே சிக்சர் விளாசியதாக கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெறுகிறது. இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷானும் சூர்யகுமார் யாதவும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்கள்.

டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த 262 ரன்கள் எடுத்தது. 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.  36.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது.

அறிமுக வீரர் இஷான் கிஷன், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய அவர், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் விரைவாக அரை சதம் அடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 26
பந்துகளில் அரை சதம் அடித்த குணால் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.

இதையடுத்து இஷான் கிஷனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுபற்றி கூறிய இஷான் கிஷன், சந்திக்கும் முதல் பந்திலேயே சிக்சர் விளாசுவேன் என்று ஓய்வறையில் இருந்தபோது, சக வீரர்களிடம் சொன்னேன். பந்துவீச்சாளர் எப்படி வீசினாலும் சிக்ஸர் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். நன்றாக பயிற்சி பெற்றிருந்தது அதற்கு உதவியது.

சிறப்பான ஆடுகளம், ஒரு நாள் போட்டியில் என் முதல் ஆட்டம், பிறந்த நாள் என எல்லாமே சாதகமாக இருந்தன. நன்றாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தர முடிவு செய்தேன். பயிற்சியின்போதே நான் 3-ம் நிலையில் களமிறங்குவேன் என பயிற்சியாளர் டிராவிட் கூறி இருந்தார். அதற்காகக் காத்திருந்தேன். வாய்ப்பு வந்ததும் நினைத்தபடி முதல்பந்தை சிக்சருக்கு தூக்கினேன்’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!

எல்.ரேணுகாதேவி

உரையின் போது கண்கலங்கிய ஜோ பைடன்!

Niruban Chakkaaravarthi

இந்தியாவில் இருந்து உடனே நாடு திரும்புங்கள்; அமெரிக்கா எச்சரிக்கை

Halley karthi