2026 அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்!

2026-ஆம் ஆண்டு வெளியாகி இந்திய் ஆளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 திரைப்படங்களை காணலாம்.

இந்திய திரையுலகில் இந்த் ஆண்டு ஏறாளமான திரைப்படங்கள் வெளியாகி வசூலை வாரிக் குவித்தன. இந்திய அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் தமிழ் திரைப்படங்களான ஜெயிலர் 2 மற்றும் கருப்ப்ய் ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளன

அதன்படி, ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்-தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ரூ.1,800 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்-2’ திரைப்படம் ரூ.760 கோடிக்குமேல் வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம் – தி கன்க்ளூசன்’ திரைப்படமும் (ரூ.577 கோடி), 4-ம் இடத்தில் ‘அனுமான் அன்ஷ்’ திரைப்படமும் (ரூ.460 கோடி), 5-வது இடத்தில் ‘பார்டர்-2’ திரைப்படமும் (ரூ.450 கோடி) உள்ளன.

​ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரூ.360 கோடி வசூலுடன் 6-வது இடத்தில் உள்ளது. 7 முதல் 10 இடங்கள் வரை முறையே ‘டாக்ஸிக்’ (ரூ.342 கோடி), ‘பெத்தி’ (ரூ.340 கோடி), ‘மிர்சாபூர் தி மூவி’ (ரூ.335 கோடி), ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ (ரூ.330 கோடி) ஆகிய படங்கள் உள்ளன. அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் டாப்-10 பட்டியலில் ‘ஜெயிலர்-2’, ‘கருப்பு’ ஆகிய இரு தமிழ்த் திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.