கோபிச்செட்டிப்பாளையம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ2.80 கோடி மீட்பு!

கோபிச்செட்டிப்பாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2.80 கோடி மீட்கப்பட்டது.  கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சுதர்சன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் பிடிபட்டு அவர்களிடமிருந்து ரூ.2.80 கோடி பணம்…

கோபிச்செட்டிப்பாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2.80 கோடி மீட்கப்பட்டது. 

கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சுதர்சன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் பிடிபட்டு அவர்களிடமிருந்து ரூ.2.80 கோடி பணம் மற்றும் இரண்டரை பவுன் நகை மீட்டக்கப்பட்டுள்ளது, இதற்காக கோபி டி.எஸ்.பி சியாமளாதேவி, ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்டது,

தடயங்கள் அடிப்படையில் வீட்டைப் பற்றி தெரிந்தவர்கள் தான் இந்த சம்பவத்தில்
ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தது.கொள்ளை நடந்த வீட்டைப் பற்றி தெரிந்தவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரிலும், கதவை உடைக்கும்
போது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தியுள்ளது. இந்நிலையில் பரிசோதனையிலும்,சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

பெரும்பாலும் கொள்ளை போகும் போது நகை போன்ற பொருட்கள் தான் கிடைக்கும் ஆனால் பணம் கிடைப்பதில்லை. இந்த சம்பவத்தை பொருத்தவரையில் கொள்ளை போன 24 மணி நேரத்தில் இம் மாவட்டத்தில் முதல் தடவையாக முழு தொகையும் கிடைத்துள்ளது
என்றனர்.

மேலும் ஒவ்வொரு கடை மற்;றும் வீடுகளிலும் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும், அது மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

—–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.