சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு,ஒரு நாளுக்கு முன்பே மது பானங்களை வாங்கி குவித்த மது அருந்துபவர்கள்.
சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி, உள்ளிட்ட அரசு விழாக்களின் போது மதுக்கடைகளை மூடுவது என்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில் நேற்று 75 வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.
விடுமுறை நாளான ஆகஸ்ட் 15 ல் மதுக்கடைகள் மூடப்படுவதை அறிந்த மது அருந்துபவர்கள், முந்தைய நாளே இரண்டு நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்குவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் ஆகஸ்ட் 14 ல் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மதுரையில் ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, மதுபானம் விற்பனையாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் சேலம் 54.12 கோடி, திருச்சி 53.48 கோவை 52.29 கோடியாக்கு விற்பனையாகி உள்ளது.







