பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்………. சென்னை மெட்ரோவில் வேலை அறிவிப்பு……… சம்பளம் இவ்வளவா……?

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதும் பயணிகளுக்கு விரைவான பயணத்தை அளிப்பது இதன் நோக்கமாகும். தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிறுவனத்தில் மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, தலைமை ஜெனரல் மேலாளர், ஜெனரல் மேலாளர், கூடுதல் ஜெனரல் மேலாளர், இணை ஜெனரல் மேலாளர், டெபியூட்டி மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 23.02.2026 ஆகும்.

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை சார்ந்த பிரிவில் 15 ஆண்டுகள் பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் மேலாளர் பதவிக்கு 7 ஆண்டுகளும், துணை மேலாளர் 4 ஆண்டுகளும் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கு 2 ஆண்டுகளும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

* தலைமை ஜெனரல் மேலாளர் – ரூ.2,70,000 சம்பளம்

* ஜெனரல் மேலாளர் – ரூ.2.25 லட்சம் சம்பளம்

* கூடுதல் ஜெனரல் மேலாளர் – ரூ.1.60 லட்சம் சம்பளம்

* இணை ஜெனரல் மேலாளர் – ரூ.1.45 லட்சம் சம்பளம்

* துணை ஜெனரல் மேலாளர் – ரூ.1.25 லட்சம் சம்பளம்

* மேலாளர், துணை, உதவி மேலாளர் பதவிகளுக்கு – ரூ.62 ஆயிரம் – ரூ.85 ஆயிரம் வரை சம்பளம்

முற்றிலும் ஒப்பந்த நிலையிலான இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : https://chennaimetrorail.org/wp-content/uploads/2026/02/Detailed-Employment-Notification-No.-CMRL-HR-CON-01-2026-Civil-2-2.pdf

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.