புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம்…

புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாகக் கடைபிடித்து, பின் இந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக  நினைவு கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தனா். அதன்படி புதுச்சேரியில்  புனிதவெள்ளி கிறிஸ்தவர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன, முன்னதாக தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அருகிலுள்ள வீதிகளிலும் சிலுவையை சுமந்து சென்ற ஏராளமான கிறிஸ்துவர்கள் இயேசுவின் துதிப் பாடல்களை பாடியபடி சிலுவை பாதை நிகழச்சியை நடத்தி வந்தனர்.

மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்து 3
ஆம் நாள் அவர் உயிர்தெழுந்தார் என்பதை உணர்த்தும் வகையில் வரும்
ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

—௧ா.ரூபி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.