கடைசி நேரத்தில் ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்ததால் இந்திய வீராங்கனை தீக்ஷா தகார் டோக்கியோவிற்கு சென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்தார். இந்தநிலையில், வரும் 4ம் தேதி தொடங்க உள்ள கோல்ப் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரிய வீராங்கனைகள் விலகிய நிலையில் தகுதிப் போட்டியில் அதற்கு அடுத்த இடத்தில் இருந்த இந்திய கோல்ப் வீராங்கனை தீக்ஷா தகாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து நேற்று இரவு விமானத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அவர் சென்றடைந்தார். 20 வயதான அரியானாவை சேர்ந்த தீக்ஷா செவித்திறன் மாற்றுத்திறனாளியாவார். 2020 ஆம் ஆண்டு இந்திய கோல்ப் கூட்டமைப்பு அர்ஜூனா விருதிற்கு இவரது பெயரை பரிந்துரை செய்தது குறிப்பிடதக்கது.








