சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு அணைகட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் சக்தி (23). இவர் அப்பகுதியில்…

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு அணைகட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் சக்தி (23). இவர் அப்பகுதியில் உள்ள ரப்பர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சக்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்து அந்த சிறுமி, சக்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் ஆன்லைன் மூலம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் சிறுமிக்கு கர்ப்பம் கலைந்தது. ஆனால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியை அவரது பெற்றோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பம் கலைவதற்காக எடுத்துக்கொண்ட மாத்திரையின் காரணமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறினர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரம், கருக்கலைப்பு செய்தல், மிரட்டுவது, போக்சோ ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.