முக்கியச் செய்திகள்

லீ மெரிடியன் ஹோட்டல் சொத்துக்களை எம்ஜிஎம்க்கு மாற்ற தடை

சென்னையில் உள்ள லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் சொத்துகளை எம்ஜிஎம் நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.

 

சென்னை மற்றும் கோவையில் லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வரும், பிரபல தொழிலதிபரான பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதனால், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சொத்துகளின் ஏல நிர்ணய தொகையை நிர்ணயம் செய்ய சென்னையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, சொத்துகளை 423 கோடி ரூபாய்க்கு வாங்க, எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் ராஜகோபாலன் விருப்பம் தெரிவித்தார். இதை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குறைந்த விலைக்கு ஏலம் விடுவது ஏற்புடையது அல்ல எனவும், தீர்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், கோரிக்கைவிடுத்து, மேல்முறையீடு செய்தது. 450 கோடி ரூபாய் கடனை குறிப்பிட்ட தினங்களுக்குள் அடைக்க தயாராக இருப்பதாகவும் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் சொத்துகளை எம்ஜிஎம் நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய அனுமதித்த உத்தரவுக்கு தடைவிதிக்கப்பட்டது. எதிர்மனுதாரர்கள் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

Gayathri Venkatesan

விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

Vandhana

நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!