ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் நாட்டு கூத்து பாடலாகும்.
https://twitter.com/RRRMovie/status/1612989220045611008?t=NYjgTMFcucWMaro5EVTOkQ&s=08
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.
மேலும், 95வது ஆஸ்கர் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதி பட்டியலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகியுள்ளது. இந்த விழா இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.







