2021ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் வென்றுள்ளார்.
ஜார்ஜ்சி உல்ஃபி இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த மா ரெயினியிஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்தில் நடித்ததற்காக சாட்விக் போஸ்மேன்னுக்கு (43) சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப்ஸ் விருது பட்டியலில் தி கிரவுன் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட ஆறு விருதுகளில் நான்கு விருதினை வென்றுள்ளது. மேலும் நோமாட்லேண்ட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, அந்த படத்தின் க்கொலோயி ஜாவோவின் சிறந்த இயக்குநர் விருதை வென்றார்.
“நோமட்லேண்ட்” படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது க்லோஸ்யிஸ் ஜாவோ வென்றார், அந்த விருதை வென்ற முதல் ஆசிய-அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்பரா ஸ்ட்ரைசாண்ட் “யென்ட்” படத்திற்காக விருது வென்றதிலிருந்து, தற்போது சிறந்த இயக்குநராக அறிவிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் க்லோஸ்யிஸ் ஜாவோ பெற்றார். கோல்டன் குளோப்ஸ் வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண்கள் இந்த பிரிவில் பரிந்துரைக்கப்பட்டனர். சிறந்த தொலைக்காட்சி தொடரில் சிறப்பாக நடித்ததற்காக ஜோஷ் ஓ’கானர், எம்மா கோரின் மற்றும் கில்லியன் ஆண்டர்சன் ஆகியோரும் விருதினை வென்றுள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலவுவதாலும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் பல்வேறு முக்கிய பொது நிகழ்ச்சிகள் அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கத்திய சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் கோல்டன் குளோப் முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஆஸ்கர் விருது விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு இவ்விழா மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவினை நடத்தி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் வழக்கமாக விருது வழங்கும் விழாக்களுக்குத் தொடக்கப்புள்ளியாக கோல்டன் குளோப்ஸ் பார்க்கப்படுகிறது.
கொரோனா நெருக்கடியால் புதிய படப்பிடிப்புகள், திரைப்படத் தயாரிப்பு வேலைகள் தடைப்பட்டுள்ளதாலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாலும் அடுத்த வருட விழாவுக்கு எந்தெந்த படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விரைவில் விதிமுறைகள் வெளியிடப்படும் என விழா அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.







