முக்கியச் செய்திகள் செய்திகள்

ஒரு தேநீரின் விலை ரூ.1,000 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தேநீர் நம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பிப் பருகக்கூடிய ஒரு பானம். நம் அன்றாட வாழ்வில் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட தேநீர் ஒரு கப் ஆயிரம் ரூபாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பார்த்த பிரதிம் கங்குலி. தேநீர் மீது கொண்ட பற்றால் தன் வேலையை ராஜினாமா செய்த இவர், தேநீர் கடை ஒன்றை புதிதாக ஆரம்பித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவரிடம் அனைத்து தேநீர் வகைகளும் கிடைக்கின்றன. குறிப்பாக சாக்லேட் தேநீர், வெள்ளை தேநீர், மக்காச்சோளத் தேநீர், நீலத் தேநீர் உள்ளிட்ட வகைகளும் கிடைக்கின்றன. குறிப்பாக ஜப்பானிய வெள்ளை இலை தேநீர் ரூபாய் ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “எனது கடையில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 115 வகையான தேநீர் உள்ளது. ஜப்பானின் சிறப்பு சில்வர் ஊசி வெள்ளை தேநீர் (Japan’s special Silver Needle White tea) ஒரு கிலோ ரூ. 2.8 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. ஆரம்பத்தில் குறைவாகவே மக்கள் வருகை தந்தாலும், தற்போது மக்கள் அதிக அளவில் இங்கு தேநீர் பருக வருகின்றனர்.
இத்தகைய பிரீமியம் தேயிலைக்கு ஆயிரம் ரூபாய் செலுத்துவது மிக உயர்ந்த விலை அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Gayathri Venkatesan

அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்; பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

Halley Karthik

ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளுக்கு உதவும் இளைஞர்!

Halley Karthik