துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள 336 கிராம் தங்கம். சிகரெட், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து
வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் விலை உயர்ந்த செல்போன்கள், மதுபானங்கள், சிகரெட்டுகள், லேப்டாப்கள் மறைத்து வைத்து க்டத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இவரிடம் இருந்து ரூ. 15 லட்சத்தி 46 ஆயிரம் மதிப்புள்ள 336 கிராம் தங்கமும் ரூ. 26 லட்சத்தி 28 ஆயிரம் மதிப்புள்ள சிக்ரெட்டுகள், மதுபானங்கள், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ரூ.41 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், சிகரெட்டுகள், மின்சாதன பொருட்களை கடத்தி வந்த சிக்கந்தரை கைது செய்து பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.








