உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 72 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கொழும்பில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த பதம்ஜோதி, பரினா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
https://twitter.com/ChennaiCustoms/status/1530523967127072769
அதுப்போல் சிங்கப்பூரில் இருந்து வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் இலங்கை பெண்கள் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ. 72 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.







