முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாநகராட்சியில் ரூ.220.64 கோடி சொத்து வரி வசூல்

தீவிர நடவடிக்கையின் மூலம் கடந்த 15 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சொத்து உரிமையாளர்கள் முறையாக சொத்து வரியை செலுத்தி சட்டபூர்வமான நடவடிக்கையை தவிர்க்க சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத 3 திருமண மண்டபங்கள்,6 ஹோட்டல்கள்,1 திரையரங்கம்,1 மருத்துவமனை,4 வணிக வளாகங்கள்,107 வணிக அங்காடிகளுக்கு சீல் வைக்கப்பட்டம்,63 பெரிய நிறுவனங்களின் கட்டடங்களுக்கு ஜப்தி அறிவிப்பு கொடுக்கப்பட்டு சொத்துவரி உடனடியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் 40 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 முதல் நடப்பு ஆண்டில் இது வரை 220.64 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919-இன் படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களுடைய சொத்தின் மீது சொத்து வரி விதிக்கப்படுகிறது. சொத்து வரியானது ஒவ்வொரு அரையாண்டிற்கு ஒருமுறை செலுத்தப்பட வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும்’

Arivazhagan CM

நமீதா மாரிமுத்து வெளியிட்ட வீடியோ; குவியும் பாராட்டு

Saravana Kumar

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

Vandhana