தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
இதையும் படியுங்கள் : பயணிகள் கவனத்திற்கு… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில், தங்கம் விலை நேற்று (ஜுன் 11) கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 12) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1,19,000க்கும் விற்பனையாகிறது.








