GOLD RATE | சற்று குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலையானது இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையானது தினமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்றது. மீண்டும் அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது.

மாதத்தின் மற்றும் வாரத்தின் முதல்நாளான நேற்று தங்க விலையானது கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.