சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றம் கண்டு வருகிறது. அதன்படி தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13, 300க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06 400க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கும் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




