தங்கம் விலையானது தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த மாதம் 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனையானது.
இந்த சூழலில் மாலையிலும் தங்க விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் தங்கம் விலையானது, கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12370 க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ. 98,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து கிலோ ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.







