தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட்மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை தங்கம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அத்னபடி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1.06 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்று காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




