தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.