தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,12,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




