தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அதன் படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,480-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,430-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,80,000-க்கு விற்பனையாகிறது.





