தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9 ஆயிரத்து 110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 170 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.








