“மோடி ஒரு கடினமான மனிதர்; சிறந்த தலைவர்” – குவாட் கூட்டத்தில் டிரம்ப் பாராட்டு!

பிரதமர் மோடி மிகவும் கடினமான மனிதர்; அவர் சிறந்த தலைவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மனிலாவில் நடைபெற்ற குவாட் (Quad) தலைவர்கள் கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய தலைவர்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை மணிலாவில் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி மிகவும் கடினமான மனிதர். அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னரும் இரண்டு முறை பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தைத் திறனை டிரம்ப் பாராட்டியுள்ளார். கடந்த 2025 பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மோடி தன்னைவிட மிகச் சிறந்த பேச்சுவார்த்தையாளர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும் அவர், குவாட் நாடுகள் உலகின் மிக முக்கியமான கூட்டாண்மைகளில் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என்று கூறிய டிரம்ப், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ராஜதந்திரம் தொடர்பாக நான்கு நாடுகளும் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, ராணுவப் பயிற்சி

குவாட் அமைப்பின் சார்பில் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) முடுக்கித் திட்டம் தொடங்கப்படும் என்றும், கடல் கட்டுப்பாட்டுப் பயிற்சிகளை உள்ளடக்கிய ராணுவப் பயிற்சி நடத்தப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையை வலுப்படுத்த 85 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என்றும், அமெரிக்காவின் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அரிய வகை கனிமங்களின் உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். “எங்களுக்குத் தேவையான அனைத்தும் இன்னும் 10 மாதங்களில் கிடைத்துவிடும்” என்று அமெரிக்காவின் விநியோகம் குறித்துப் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, “இந்தியாவைப் பொறுத்தவரை, குவாட் அமைப்பு ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பகமான கூட்டாண்மையாக உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடல்சார் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

உக்ரைன், ஈரான் விவகாரங்கள் குறித்து கருத்து

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரிடம் வலியுறுத்தப் போவதாக அவர் தெரிவித்தார். புதின் நேரம் ஒதுக்கினால் அவரைத் தனியாகச் சந்திக்கவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

தைவான் விவகாரத்தை ஜி ஜின்பிங் எழுப்புவார் என எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு, “அவர் என்னைச் சந்திக்க விரும்புவார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று பதிலளித்தார்.

ஈரான் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறினார்.

என்விடியா குறித்து டிரம்ப் கருத்து

என்விடியா நிறுவனத்தின் தேசியப் பாதுகாப்பு முன்னெடுப்புக்கும் டிரம்ப் வரவேற்பு தெரிவித்தார். அது நல்ல யோசனை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவுக்கு தகவல்களைப் பரிமாறியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகியதாக செய்திகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.