சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல், தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4469 -க்கு விற்கப்படுகிறது. நேற்று மாலை, இதன் விலை ரூ. 4485 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது.
இதுபோல் ஒரு சவரன் தங்கம் விலையில், 128 ரூபாய் குறைந்து, 35 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.35,880-க்கு விற் பனை செய்யப்பட்டது.
எனினும், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 19 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.








