முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி துணை சபாநாயகராக ராஜவேலு தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநர் உரையுடன் நாளை தொடங்க உள்ளது. துணை சபாநாயர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறும் எனவும், இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு துணை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேறு யாரும் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ராஜவேலு போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக ராஜவேலு நாளை பதவியேற்கவுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

’அந்த பத்திரிகையாளரோடு என் மகளை கைது செய்தது ஏன்?’- இளம்பெண்ணின் தாய் வேதனை!

Halley karthi

அண்டார்டிகாவில் உச்சத்தை தொட்ட வெப்பநிலை!

Vandhana

மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கமல்ஹாசன்

Saravana